ADDED : ஜூலை 21, 2011 02:32 AM
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாகுடி பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாஸ்கர்.
இவரது மனைவி நிர்மலா(32). தகராறு காரணமாக பாஸ்கரின் தம்பி சங்கர்(30) நிர்மலாவை தாக்கினார். இதுகுறித்து நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் எஸ்.ஐ., சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரித்து வருகிறார்.


