/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மே தின விழா பொதுக்கூட்டம் அமைச்சர் சண்முகம் பங்கேற்புமே தின விழா பொதுக்கூட்டம் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு
மே தின விழா பொதுக்கூட்டம் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு
மே தின விழா பொதுக்கூட்டம் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு
மே தின விழா பொதுக்கூட்டம் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு
ADDED : ஜூலை 19, 2011 12:31 AM
விழுப்புரம் : மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம் ரயிலடியில் நடந்த பொதுக்கூட்டத்திற்குதொழிற் சங்க செயலா ளர் அற்புதவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு துவக்கவுரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், இளங்கோவன், நகர நிர்வாகிகள் யூசூப், மூர்த்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, நடராஜன், செல்வம், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரான கல்வித்துறை அமைச்சர் சண்முகம், தலைமை கழகப் பேச்சாளர் ஆவடி குமார் சிறப்புரையாற்றினர். மாவட்ட இளைஞரணி பசுபதி, மாணவரணி செங்குட்டுவன், வக்கீல்அணி பொன் சிவா, விவசாய அணி தணிகாசலம், இலக்கிய அணி பாஸ்கரன், எம்.ஜி.ஆர்., மன்றம் நூர்முகமது, ஜெ., பேரவை ரகுநாதன், நகர மாணவரணி கணேஷ் சக்திவேல் கலந்து கொண்டனர். தொழிற் சங்க துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் தி.மு.க., பிரதிநிதி ஜெகன், வக்கீல் குமரன் உட்பட 25 பேர் அ.தி. மு.க.,வில் இணைந்தனர்.