Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/நிலத்தை மீட்டுத் தர அங்கம்மாள் காலனி மக்கள் மனு

நிலத்தை மீட்டுத் தர அங்கம்மாள் காலனி மக்கள் மனு

நிலத்தை மீட்டுத் தர அங்கம்மாள் காலனி மக்கள் மனு

நிலத்தை மீட்டுத் தர அங்கம்மாள் காலனி மக்கள் மனு

ADDED : ஜூலை 12, 2011 01:28 AM


Google News
சேலம்: சேலம் அங்கம்மாள் காலனி மக்கள், தங்களது நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அங்கம்மாள் காலனியில், 30 குடும்பத்தைச் சேர்ந்தோர் வாழ்ந்து வந்தனர். 2008ல் மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகம் தரப்பு, அங்கிருந்தோரை காலி செய்து நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போதிருந்த அதிகாரிகளும், இதற்கு உடந்தையாக செயல்பட்டனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் நிலங்கள் மீட்டுத்தரப்படும் என்ற முதல்வரின் உத்தரவால், அங்கம்மாள் காலனி மக்கள், கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், 30 குடும்பத்தைச் சேர்ந்தோர் வெளியேற்றப்பட்டு, குடியிருக்க இடம் இல்லாமல் அவதிப்படுகிறோம். தானமாக வழங்கப்பட்ட எங்களது நிலத்தை, மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் கூறியிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us