/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தி.மு.க.,வினர் மீதான வழக்குகளை கட்சி எதிர்கொள்ளும்: ஸ்டாலின்தி.மு.க.,வினர் மீதான வழக்குகளை கட்சி எதிர்கொள்ளும்: ஸ்டாலின்
தி.மு.க.,வினர் மீதான வழக்குகளை கட்சி எதிர்கொள்ளும்: ஸ்டாலின்
தி.மு.க.,வினர் மீதான வழக்குகளை கட்சி எதிர்கொள்ளும்: ஸ்டாலின்
தி.மு.க.,வினர் மீதான வழக்குகளை கட்சி எதிர்கொள்ளும்: ஸ்டாலின்
ADDED : ஜூலை 11, 2011 10:31 PM
கோவை : ''தி.மு.க.,வினர் மீது போடப்படும் வழக்குகளை கட்சி எதிர்கொள்ளும்,'' என, அக்கட்சியின் மாநில பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடக்கவுள்ளது. இதற்காக, கோவை சிங்காநல்லூரில், விஜயா கண்காட்சி வளாகத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியைப் பார்வையிட, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வந்தார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:வரும் 22 மாலை அல்லது 23ம் தேதி காலையில், கட்சித்தலைவர் கருணாநிதி, கோவை வருவார்.தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் மீது ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. பெரும்பாலான வழக்குகளுக்கு ஆதாரங்கள் எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை. இதை எதிர்கொள்ள தி.மு.க., தயாராகி வருகிறது. அ.தி.மு.க., அரசால் பாதிக்கப்படும் தி.மு.க., நிர்வாகிகளைக் காப்பதற்கு, கட்சியின் வழக்கறிஞர் அணி, தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்.
இத்தகைய பொய் வழக்குகள் தொடர்பாக, கட்சியின் மாநிலத் தலைமையிடமும், அந்தந்த மாவட்டத் தலைமையிடமும் தகவல் தெரிவிக்கலாம். அங்குள்ள வழக்கறிஞர்கள், தேவையான ஆலோசனைகளை வழங்குவர்.இவ்வாறு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.