Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பாலூர் ரயில்நீர் திட்டத்தை கைவிடபாலாற்றுப் பாதுகாப்பு கூட்டியக்கம் கோரிக்கை

பாலூர் ரயில்நீர் திட்டத்தை கைவிடபாலாற்றுப் பாதுகாப்பு கூட்டியக்கம் கோரிக்கை

பாலூர் ரயில்நீர் திட்டத்தை கைவிடபாலாற்றுப் பாதுகாப்பு கூட்டியக்கம் கோரிக்கை

பாலூர் ரயில்நீர் திட்டத்தை கைவிடபாலாற்றுப் பாதுகாப்பு கூட்டியக்கம் கோரிக்கை

ADDED : ஜூலை 13, 2011 05:13 AM


Google News
செங்கல்பட்டு:பாலூர் ரயில்நீர் திட்டத்தை கைவிடவேண்டுமென, பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டியக்கம், கோரிக்கை விடுத்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த பாலூரில், இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், 17 கோடி ரூபாய் செலவில், ரயில்நீர் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை கைவிடக் கோரி, பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் கூறியதாவது:தமிழகம், தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் நிலையில், இந்திய ரயில்வே துறை, தமிழகத்தின் நிலத்தடி நீராதாரத்தை, சுரண்டும் வகையில் பாலூர் ரயில்நீர் என்ற பெயரில், தண்ணீரை எடுத்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.ஏற்கனவே, பாலாற்றில் கர்நாடக, ஆந்திர மாநிலங்கள் தண்ணீர் தராமல் அணைகள் பல கட்டி, பாலாற்றை வறண்டு போகச் செய்துவிட்டன. ஒப்பந்தப் படி, தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுத் தர வேண்டிய இந்திய அரசு, தமிழகத்தின் பாலாற்று உரிமையை நிலைநாட்ட மறுப்பதுடன், தமிழக பாலாற்றுப் பகுதியிலிருந்து, தண்ணீரை எடுத்து, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய ரயில்வே துறைக்கு விற்பது, மத்திய அரசின் தமிழக விரோத போக்கை காட்டுகிறது. அந்த மாநிலங்களுக்கு, வரைமுறையின்றி, தமிழகத்திலிருந்து ஆற்று மணலும் அனுப்பப்பட்டு வருகிறது.பாலாற்றில் நிலத்தடி நீராதாரம் குறைந்துள்ள நிலையில், ஒரு நாளைக்கு, 2 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, ரயில்நீர் என்ற பெயரில் விற்பனை செய்வது, கண்டிக்கத்தக்கது.

காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் பாலாற்றுப் படுகையில், வரைமுறையற்ற மணல்கொள்ளையால் குடிநீர், விவசாய தேவைகளுக்கு, மக்கள் திண்டாடும் நிலையில், ரயில்நீர் என்ற பெயரில், தண்ணீர் எடுத்து விற்பது, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல். எனவே, ரயில்வே துறை, பாலூர் ரயில் நீர் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான இத்திட்டத்தை தடுத்து நிறுத்த, தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.என்.ஏ.கேசவன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us