10 ஆயிரம் பேருக்கு சுய வேலை வாய்ப்பு
10 ஆயிரம் பேருக்கு சுய வேலை வாய்ப்பு
10 ஆயிரம் பேருக்கு சுய வேலை வாய்ப்பு
ADDED : செப் 06, 2011 11:46 PM
ராமநாதபுரம்: தமிழகத்தில் இந்தாண்டு 10 ஆயிரம் பேருக்கு சுய வேலை வாய்ப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற இளைஞர்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் அமைத்து சுய வேலை வாய்ப்பு உருவாக்க 'வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்' ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம், ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் 1.5 லட்சத்துக்கு மிகாமலும், குறைந்த பட்சம் ஒரே பகுதியில் மூன்று ஆண்டுகள் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இந்தாண்டு 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிகளை அடுத்தாண்டு மார்ச்க்குள் நிறைவேற்ற அந்தந்த மாவட்ட தொழில் மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.