மேலும் இரு வழக்குகளில் அனிதாவுக்கு "ரிமாண்ட்'
மேலும் இரு வழக்குகளில் அனிதாவுக்கு "ரிமாண்ட்'
மேலும் இரு வழக்குகளில் அனிதாவுக்கு "ரிமாண்ட்'
ADDED : ஆக 20, 2011 08:20 PM
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோர்ட்டில், ஆஜர்படுத்தப்பட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், மேலும் இரு வழக்குகளில், 'ரிமாண்ட்' செய்யப்பட்டார்.
இவரை, போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரும் மனு மீதான விசாரணை, நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் சுரேஷை, கொலை செய்யத் தூண்டிய வழக்கில், திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையிலடைக்கப்பட்டார்.இந்நிலையில், ஆறுமுகநேரி நகர தி.மு.க., அலுவலகத்திற்கு தீவைக்கத் தூண்டியது, டாஸ்மாக் பார் மீது பெட்ரோல் குண்டு வீசத் தூண்டியது என, மேலும் இரு வழக்குகளில், அனிதா ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட்டார். இவ்வழக்குகள் தொடர்பாக, இவரை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, ஆறுமுகநேரி போலீசார் திருச்செந்தூர் ஜே.எம்., கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அனிதாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ப்ரீதா, ''மேலும் இரு வழக்குகளில், உங்களை கைது செய்து இங்கு 'ரிமாண்ட்' செய்வதாக போலீசார் கூறியுள்ளனர். அதற்கு, நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?'' என்றார். அதற்குப் பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன்<, ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன'' என்றார்.இதையடுத்து, இவ்வழக்கு மீதான விசாரணையை, ஆக.30ம் தேதிக்கு, நீதிபதி ஒத்திவைத்தார். அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால், இவ்வழக்கு மீதான விசாரணையை, ஆக. 22ம்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.