/உள்ளூர் செய்திகள்/சென்னை/மேயர் வேட்பாளர்கள் யார்? கூட்டணி அமைத்து போட்டியிட ம.தி.மு.க., முடிவுமேயர் வேட்பாளர்கள் யார்? கூட்டணி அமைத்து போட்டியிட ம.தி.மு.க., முடிவு
மேயர் வேட்பாளர்கள் யார்? கூட்டணி அமைத்து போட்டியிட ம.தி.மு.க., முடிவு
மேயர் வேட்பாளர்கள் யார்? கூட்டணி அமைத்து போட்டியிட ம.தி.மு.க., முடிவு
மேயர் வேட்பாளர்கள் யார்? கூட்டணி அமைத்து போட்டியிட ம.தி.மு.க., முடிவு
ADDED : ஆக 21, 2011 02:34 AM
சென்னை : சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட ராஜ்யசபா எம்.பி.,க் கள் உட்பட 4 பேரும், தி.மு.க., வில் சிட்டிங் மேயர் உட்பட 3 பேரின் பெயர்கள் அடிப்படுகிறது.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருகிறது.அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும், எதிர்கட்சியினரும் தேர்தலில் போட்டியிட மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில் சட்டசபை தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட சதவீதம் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலிலும் ஒதுக்கீடு செய்ய அ.தி. மு.க., தலைமை முடிவு செய்துள் ளது.தே.மு.தி.க.,வை பொறுத்தவரை, கூடுதல் சதவீத ஒதுக்கீட்டை பெற வேண்டும் என, விரும்புகிறது. அ.தி.மு.க.,வில் மாவட்ட வாரியாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் போட்டியிடுவதற்கு ஆளுங்கட்சியினர் தயாராகியுள்ளனர்.மேயர், நகராட்சி தலைவர்கள் பதவிக்கு நேரடி தேர்தல் நடக்கும் என ஆளுங்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, இரண்டு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்கக் கூடாது என்றும், 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை கவுன்சிலர்களாக இருந்து பொதுமக்களிடம் அதிருப்தியை சம்பாதித்தவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2006ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறை வெடித்தது. நியாயமாக தேர்தல் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களுக்கும், கட்சிக்கு விசுவாசமாக உழைத்து வருபவர்களுக்கும், பொதுமக்களிடம், தொண்டர்களிடமும் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியை இதுவரை அ.தி.மு.க., கைப்பற்றவில்லை. அதனால், இந்த முறை மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதில் கட்சியினர் தீவிரமாக பணியாற்ற முடிவெடுத்துள்ளனர். மேயர் பதவிக்கு ராஜ்யசபா எம்.பி., வகித்து வரும் பாலகங்கா, மைத்ரேயன் மற்றும் எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில செயலர் ஆதிராஜாராம், நடிகர் ராதாரவி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சம் 150 வார்டுகளில் அ.தி.மு.க., போட்டியிடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., வெளியேறி விட்டது. அக்கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. ஆனால், மற்றொரு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். தி.மு.க., சார்பில் மேயர் தேர்தலில் சிட்டிங் மேயர் மா.சுப்ரமணியன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., செங்கை சிவம், முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு, ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்ற வழக்கறிஞர் முகமது அலி ஜின்னா, நடிகை குஷ்பு ஆகியாரின் பெயர்கள் அடிபடுகின்றன. ம.தி.மு.க.,வை பொறுத்தவரை, சட்டசபை தேர்லை புறக்கணித்திருந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இரு கட்சிகளும் ம.தி.மு.க., வை ஏற்கவில்லை என்றால் பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் ஆலோசித்து வருகிறது. எனவே உள்ளாட்சி தேர்தலில் புதிய கூட்டணிகள் உதயமாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.சிந்தாஞானராஜ்


