இரட்டைப்பதிவு வாக்காளர்கள் நீக்கம்
இரட்டைப்பதிவு வாக்காளர்கள் நீக்கம்
இரட்டைப்பதிவு வாக்காளர்கள் நீக்கம்
ADDED : செப் 10, 2011 01:16 AM
திண்டுக்கல் :வாக்காளர்பட்டியலில் இரண்டு முறை பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்களை, நீக்கம் செய்யும் பணி நடந்துவருகிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. தற்போதுள்ள பட்டியலில் பெயரும், போட்டோவும் ஒரே மாதிரியாக இரு முறை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் பெயர்கள் குறித்து விபரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் பெயரே பட்டியலில் இருமுறை இடம் பெற்றுள்ளது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டு உள்ளது.இவற்றை தனியாக பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் முகவரில் உள்ளனரா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்த பணியில் தேர்தல் களபணியாளர்களான நகராட்சி பகுதியில் பில் கலெக்டர்கள், கிராம பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இரட்டைபதிவு குறித்து செப்., 12 க்குள் விசாரித்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரட்டை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1 ல் வெளியிடப்படும்.