ADDED : ஆக 20, 2011 04:19 PM

சென்னை: தாய்லாந்து கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், 'தாய்லாந்து வர்த்தக கண்காட்சி 2011' சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.
தாய்லாந்து ஏற்றுமதி வளர்ச்சித்துறை, தாய்லாந்து வர்த்தக அமைச்சரகம், ராயல் தாய் அரசு சார்பில், தாய்லாந்து வர்த்தக கண்காட்சி 2011, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கண்காட்சியை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் திறந்து வைத்தார்.
தாய்லாந்து வர்த்தக துறையின் தொழில் கொள்கை துணை தலைவர் லீனா, தாய்லாந்து வர்த்தக மையத்தின் தலைவர் பைசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இக்கண்காட்சி, ஆறாவது முறையாக, சென்னையில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் வர்த்தகம் மட்டும் இல்லாமல், தாய்லாந்து கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், தாய்லாந்து உணவு வகைகள்; தாய்லாந்து தற்பாதுகாப்பு கலை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தாய்லாந்து ஆடைகள், நகைகள், இயற்கை தைலங்கள் உள்ளிட்ட ஏராளமான ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை கண்டுகளிக்கும் பார்வையாளர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் தாய்லாந்து நடனம், தாய்லாந்து கிக் பாக்சிங், தாய்லாந்து உணவு வகைகள் செய்முறை, தாய்லாந்து மசாஜ் என பல அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளுக்காக சிறப்பு விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தாய்லாந்து தூதரக அதிகாரி சான்சாய் கூறும்போது, 'இந்தியா, தெற்கு ஆசியாவில் ஒரு வல்லரசாகவும், அதிக வர்த்தகத்திற்கு சிறந்த நாடாகவும் திகழ்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது இந்தியாவில் முதலீடு செய்து, இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை உயர்த்தியிருக்கின்றனர். ராயல் தாய்லாந்து அரசும், இந்திய அரம்ச இணைந்து இந்தியாவில், 6.6 பில்லியன் டாலர் வர்த்தக திட்டம் 2010ம் ஆண்டு வரை இந்தியாவில் செயல்படுத்தியுள்@ளாம். இந்த ஆண்டு குறியீட்டுத் தொகை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.