நேருவை "கஸ்டடி' எடுக்க போலீஸ் திட்டம் : 5ம் தேதி மனு விசாரணை
நேருவை "கஸ்டடி' எடுக்க போலீஸ் திட்டம் : 5ம் தேதி மனு விசாரணை
நேருவை "கஸ்டடி' எடுக்க போலீஸ் திட்டம் : 5ம் தேதி மனு விசாரணை
ADDED : செப் 01, 2011 12:09 AM
திருச்சி : நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேருவை, 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க, மாநகர போலீசார், நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
'திருச்சி மாவட்ட தி.மு.க., அலுவலகமான கலைஞர் அறிவாலயம், தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது' என, துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட, 11 பேர் மீது, மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட, 12 பிரிவுகளில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின்படி, முன்னாள் அமைச்சர் நேரு, துணை மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, லஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்ராஜுலு, பந்தல் கான்ட்ராக்டர் மாமுண்டி, மாவட்ட தி.மு.க., துணைச் செயலர் குடமுருட்டி சேகர், ஷெரீப் ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி, கடலூர், சேலம் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், ம.தி.மு.க., தீர்மானக் குழு உறுப்பினர் தமிழ்மாறன், அவரது மகன் தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். கடந்த 29ம் தேதி, துணை மேயர் அன்பழகன், தி.மு.க., மாவட்ட துணைச் செயலர் குடமுருட்டி சேகர், ஷெரீப் ஆகிய மூவரையும், போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், போலீசாரின், 'கஸ்டடி' மனுவை மாஜிஸ்திரேட் புஷ்பராணி தள்ளுபடி செய்தார். அடுத்ததாக, முன்னாள் அமைச்சர் நேருவை, 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு, அதற்காக ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மனு மீதான விசாரணை, வரும் 5ம் தேதி வருகிறது. அதற்காக, முன்னாள் அமைச்சர் நேரு, கடலூர் சிறையிலிருந்து திருச்சி அழைத்து வரப்பட உள்ளார்.