Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/திருமணமாகாத பெண் போலீஸ் உடல் கிணற்றிலிருந்து குழந்தையுடன் மீட்பு :பெரம்பலூரில் அடுத்தடுத்து பரபரப்பு

திருமணமாகாத பெண் போலீஸ் உடல் கிணற்றிலிருந்து குழந்தையுடன் மீட்பு :பெரம்பலூரில் அடுத்தடுத்து பரபரப்பு

திருமணமாகாத பெண் போலீஸ் உடல் கிணற்றிலிருந்து குழந்தையுடன் மீட்பு :பெரம்பலூரில் அடுத்தடுத்து பரபரப்பு

திருமணமாகாத பெண் போலீஸ் உடல் கிணற்றிலிருந்து குழந்தையுடன் மீட்பு :பெரம்பலூரில் அடுத்தடுத்து பரபரப்பு

ADDED : ஜூலை 26, 2011 12:40 AM


Google News

பெரம்பலூர்: திருமணமாகாத பயிற்சி பெண் போலீஸ் ஒருவர், குழந்தையுடன் கிணற்றில் பிணமாக கிடந்தால் பெரம்பலூர் அருகே, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகள் சவுமியா (20). இவர், உளுந்தூர்பேட்டை போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். கடந்த சில மாதங்களாக, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷனில், பயிற்சி போலீஸாக பணியாற்றி வந்தார்.

திருமணமாகாத சவுமியா திடீரென கர்ப்பமானார். வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி, வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் மறைத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ம் தேதி சவுமியாவுக்கு, திருச்சி கே.எம்.சி., தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சவுமியா விடுப்பு எடுத்துக்கொண்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அதன்பின், நேற்று முன்தினம் காலை முதல் சவுமியாவையும் குழந்தையையும் காணவில்லை என்று, அவரது தந்தை வெங்கடாசலம், பெரம்பலூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, சவுமியாவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில், அதே கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரது கிணற்றில் குழந்தையை சுடிதார், 'ஷால்' மூலம் இடுப்பில் கட்டியவாறு சவுமியா பிணமாக கிடந்தது தெரியவந்தது. பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சவுமியா மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி., சிவக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், பயிற்சி போலீஸ் சவுமியாவின் மர்ம மரணம் குறித்துவிசாரிக்கிறார். இதே கிராமத்தில், நேற்று முன்தினம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் தானும் தற் கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us