/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அந்தியூர் டவுன் பஞ்., கைப்பற்ற சர்வ கட்சியும் குறிஅந்தியூர் டவுன் பஞ்., கைப்பற்ற சர்வ கட்சியும் குறி
அந்தியூர் டவுன் பஞ்., கைப்பற்ற சர்வ கட்சியும் குறி
அந்தியூர் டவுன் பஞ்., கைப்பற்ற சர்வ கட்சியும் குறி
அந்தியூர் டவுன் பஞ்., கைப்பற்ற சர்வ கட்சியும் குறி
ADDED : செப் 14, 2011 01:11 AM
அந்தியூர்: தி.மு.க., வசமுள்ள அந்தியூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்ற, அ.தி.மு.க., உள்ளிட்ட சர்வ கட்சியினரும் போட்டி போட்டு விருப்ப மனுக்கள் அளித்து வருகின்றனர்.மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கும் விருப்ப மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.அந்தியூர் டவுன் பஞ்சாயத்து தலைவராக தி.மு.க., வெங்கடாச்சலம் உள்ளார்.
இப்பதவியை கைப்பற்ற, அ.தி.மு.க., - தே.மு.தி.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க.,வுக்குள்ளேயே பலர் போட்டி போட்டு பணம் கட்டியுள்ளனர்.அ.தி.மு.க., சார்பில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முனுசாமி நாயுடு, நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட எட்டு பேர் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளனர்.தி.மு.க., சார்பில், தற்போதைய தலைவர் வெங்கடாச்சலம், முன்னாள் பேரூர் துணைச் செயலாளர் மாதேஸ்வரன், வார்டு கவுன்சிலர் அய்யாசாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் எழில் வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.தே.மு.தி.க., சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜா சம்பத், பேரூர் செயலாளர் அன்பரசு, கேப்டன் மன்ற செயலாளர் பழனிச்சாமி, பேரூர் பொருளாளர் சிவக்குமார் ஆகியோர், 'சீட்' கேட்டுள்ளனர்.இதுமட்டுமின்றி, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், பேரவை ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய பொருளாளர் சக்திவேல், சின்னத்தம்பிபாளையம் பஞ்சாயத்து தலைவர் சின்னமாரநாயக்கர் உள்ளிட்ட ஒன்பது பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.தி.மு.க.,வில் முன்னாள் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர் மகாலிங்கம், சின்னத்தம்பிபாளையம் கிளை செயலாளர் உள்ளிட்ட பலர் விருப்ப மனு அளித்துள்ளனர்.தே.மு.தி.க., சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜா சம்பத், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் பாலமுருகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாதானந்தம் உள்ளிட்ட பலர் சீட் கேட்டுள்ளனர்.மொத்தம் 16 வார்டுகள் கொண்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக, அ.தி.மு.க., வில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட 100க்கும் மேற்பட்டோரும், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., சார்பில் 50க்கும் மேற்பட்டோரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.