/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டி- உளுந்தூர்பேட்டை சாலைக்கு ஒருவழிச்சாலை செயல்படுத்த முடிவுபண்ருட்டி- உளுந்தூர்பேட்டை சாலைக்கு ஒருவழிச்சாலை செயல்படுத்த முடிவு
பண்ருட்டி- உளுந்தூர்பேட்டை சாலைக்கு ஒருவழிச்சாலை செயல்படுத்த முடிவு
பண்ருட்டி- உளுந்தூர்பேட்டை சாலைக்கு ஒருவழிச்சாலை செயல்படுத்த முடிவு
பண்ருட்டி- உளுந்தூர்பேட்டை சாலைக்கு ஒருவழிச்சாலை செயல்படுத்த முடிவு
ADDED : செப் 04, 2011 11:07 PM
பண்ருட்டி : பண்ருட்டி - உளுந்தூர்பேட்டை சாலையில் இணையும் ஒருவழிச்சாலை திட்டம் செயல்படுத்த தாசில்தார் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர், அரசூர் மார்க்கமாக பண்ருட்டி நகருக்கு வரும் வாகனங்கள் காந்திரோடு, ராஜாஜி சாலையில் ஒருவழிச்சாலையாக வந்து செல்கிறது. இந்த இரு சாலைகளும் பல இடங்களில் குறுகலாகவும், வளைவுகள் நிறைந்த பகுதியாக உள்ளது. அதுபோல் இப்பகுதியில் வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் பிசியான காந்தி ரோட்டில் ஒரு கி.மீ., கடப்பதற்கு 20 நிமிடம் ஆகிறது. இதற்கு புறவழிச்சாலை திட்டம் கோரி சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 42 கோடி ரூபா# நிதி தேவை. இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலைகள் போடப்படும் என்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் பண்ருட்டியில் ஆ#வு செ#த கலெக்டர் பண்ருட்டி- உளுந்தூர்பேட்டை சாலைக்கு மாற்றுவழிப்பாதை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. தாசில்தார் அனந்தராம் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி துணை சேர்மன் கோதண்டபாணி, நெடுஞ்சாலை உதவிக் கோட்ட பொறியாளர் சுந்தரி, விற்பனைக்குழுகூட கண்காணிப்பாளர் தீனதயாளன், நகராட்சி கமிஷனர் அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பண்ருட்டி - உளுந்தூர்பேட்டை சாலைக்கு ஒருவழிச்சாலை ஏற்படுத்த டேனிஷ் மிஷின் பள்ளி தானமாக வழங்கிய இடத்தில் இருந்து அருகில் சாலைக்குத் தேவையான கூடுதல் இடங்கள் பெற்றிடவும், விஸ்வா நகர், திருநகர் வழியாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட மதில் சுவர் பகுதியில் கொண்டு செல்லவும், இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள், நிலங்கள் கையகப்படுத்த கலெக்டருக்கு பரிந்துரைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.