/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காட்டுயானையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணத் தொகைகாட்டுயானையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணத் தொகை
காட்டுயானையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணத் தொகை
காட்டுயானையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணத் தொகை
காட்டுயானையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணத் தொகை
ADDED : ஆக 03, 2011 01:25 AM
பேரூர் : காட்டுயானையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, 57 ஆயிரத்து 500 ரூபாயை நிவாரணத் தொகையாக, வனத்துறை அமைச்சர் வழங்கினார்.
இருட்டுபள்ளம் வனத்துறை அலுவலகத்தில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. தொழில்துறை அமைச்சர் வேலுமணி தலைமை வகித்து பேசுகையில்,''பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது. யானை - மனித மோதலை தடுத்திட அகழி, மின்வேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என்றார். வனத்துறை அமைச்சர் பச்சைமால் வனஅலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்து பேசுகையில்,''வன விலங்குகளால் பாதிப்புள்ள பகுதிகளில் மின்வேலி, அகழி அமைப்பது தொடர்பான நிதி ஒதுக்கீடு அறிவிப்பு, பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக உள்ளது,''என்றார்.யானை தாக்கி பாதிக்கப்பட்ட, ஒரு குடும்பத்துக்கு 20 ஆயிரம் ரூபாய், பயிர்ச்சேத கடனாக 5 பேருக்கு தலா 5,000 ரூபாய், 3 பேருக்கு தலா 7,500 ரூபாய், ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் உள்பட மொத்தம் 57 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத்தொகையாக வழங்கினார். மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, சின்னராஜ், ஒன்றிய செயலாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.