குழந்தைகளுக்கான அரட்டை, ஆர்ப்பாட்டம்
குழந்தைகளுக்கான அரட்டை, ஆர்ப்பாட்டம்
குழந்தைகளுக்கான அரட்டை, ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 20, 2011 04:09 PM
சென்னை: சென்னை எழும்பூர் மியூசியம் தியேட்டரில் குழந்தைகளுக்கான கலை,அரட்டை, ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாணவர்களும் பெற்றோரும் தங்களுக்கு பிடித்த பாடல்களையும் கவிதைகளையும் பாடினர். நாளந்தா வழி என்ற அமைப்பும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த 14 நாள் விழாவில் பங்கேற்றவர்கள், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நாளந்தா வழி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் வி.ஐயரை வெகுவாக பாராட்டினர். குழந்தைகளிடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி அபூர்வமாக நடைபெறும் இந்த நாட்களில் இத்தகைய கலை, அரட்டை, ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சி அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இது பார்வையாளர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அமைந்தாலும் இதில் பங்கேற்றவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது. அனில் ஸ்ரீநிவாசனின் இசையில் பாரதியார் பாடல்களை பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் பாடினார். அடுத்ததாக நவீன் ஐயர், புல்லாங்குழலில் பாரதியார் பாடல்களை வாசித்தார். அதைத் தொடர்ந்து நரேஷ் ஐயர், பாரதியார் பாடல்களையும் திரைப்பட பாடல்களையும் பாடினார். கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் எழுதிய ஆயிரம் கதைகள் கொண்ட புத்தகமும் வெளியிடப்பட்டது. துவக்க விழாவில் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஆண்ட்ரூ சிம்கின் தøலைமை வகித்தார்.