/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வால்பாறையில் யானைகள் உலா எஸ்டேட் தொழிலாளர்கள் பீதிவால்பாறையில் யானைகள் உலா எஸ்டேட் தொழிலாளர்கள் பீதி
வால்பாறையில் யானைகள் உலா எஸ்டேட் தொழிலாளர்கள் பீதி
வால்பாறையில் யானைகள் உலா எஸ்டேட் தொழிலாளர்கள் பீதி
வால்பாறையில் யானைகள் உலா எஸ்டேட் தொழிலாளர்கள் பீதி
ADDED : ஜூலை 26, 2011 11:08 PM
வால்பாறை : வால்பாறை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, குட்டியுடன் காட்டு யானைகள் உலா வருகின்றன.
முடீஸ் நல்லமுடி எஸ்டேட், தாய்முடி, சோலையாறு உட்பட பகுதிகளில் நுழைந்த யானைகளை, வனத்துறையினர் சிறுகுன்றா வனப்பகுதிக்கு விரட்டினர். கடந்த மூன்று நாட்களாக, இப்பகுதியிலேயே யானைகள் முகாமிட்டுள்ளதால், இதை சுற்றியுள்ள காஞ்சமலை, நடுமலை, சிறுகுன்றா, சின்கோனா ஆகிய எஸ்டேட் பகுதி தொழிலாளர்கள், பீதியில் உள்ளனர். மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியரிடம் கேட்ட போது, ''யானைகள், தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது; பொதுமக்கள் பயப்பட தேவையில்லை,'' என்றார்.