/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயம்மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயம்
மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயம்
மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயம்
மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயம்
ADDED : ஆக 06, 2011 02:25 AM
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே கோவில்பட்டியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை மின்னல் தாக்கியதில், மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகேயுள்ள கோவில்பட்டியில் உள்ள காஞ்சனம்குளத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட பணிகள் நடந்து வருகிறது. நேற்று மதியம் மூன்று மணியளவில் குளத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்ததால், வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் அங்குள்ள ஆலமரத்தடியின் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதால் வீ. இடையப்பட்டி பஞ்சாயத்து மக்கள் நலப்பணியாளர் கந்தசாமி (43), அடுத்ததாக கோவில்பட்டியைச் சேர்ந்த லலிதா (30), சீதை (45), லட்சுமி (47), சித்ரா (31), ஆண்டியப்பன் (62) ஆகிய ஆறுபேரும் மின்னல் தாக்கியதில் மயக்கமடைந்தனர். இதில், லலிதா என்ற பெண் அணிந்திருந்த தங்கத்தாலிக்குழாய் மின்னல் தாக்கியதால் கருகிறது. சித்ரா என்ற பெண்ணுக்கு காது கேட்காமல் போனது. மற்றவர்களுக்கு தீக்காயம் போல் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.