Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/போலீஸாருக்கான மருத்துவ முகாம்

போலீஸாருக்கான மருத்துவ முகாம்

போலீஸாருக்கான மருத்துவ முகாம்

போலீஸாருக்கான மருத்துவ முகாம்

ADDED : ஆக 15, 2011 01:22 AM


Google News
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.

அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த முகாமை எஸ்.பி., முத்துசாமி துவக்கிவைத்தார். டவுன் டி.எஸ்.பி., கீதா, பொன்னமராவதி டி. எஸ்.பி., தங்கவேலு உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் புதுக்கோட்டை, பொன்னமராவ தி உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிவரும் போலீஸார், புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிவரும் போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 500க்கும் மேற்பட்டவர் கலந்துகொண்டு மருத்துவ பரிசே õதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் எழிலரசன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எட்வின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us