/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பு துவக்க விழாதகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பு துவக்க விழா
தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பு துவக்க விழா
தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பு துவக்க விழா
தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பு துவக்க விழா
ADDED : ஆக 03, 2011 01:25 AM
குறிச்சி : நவக்கரை அருகேயுள்ள ஈசா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின், தகவல் தொழில் நுட்பத் துறையின் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது.
கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வர் விஷ்ணுராம் தலைமை வகித்தார். துறைத் தலைவர் தினேஷ் வரவேற்றார். கோவை, ராம்நகர் என்.ஐ.ஐ.டி., மைய நிர்வாகி உஷா பேசுகையில்,'' தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில், டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை முன்னணியில் உள்ளன. கிளவுட் கம்ப்யூட்டிங், வர்த்தகம், வெப் அப்ளிகேஷன், கிராபிக் டிசைனிங் உள்ளிட்டவை குறித்து, இத்துறையில் பயில்வோர் கற்றுக்கொள்ள வேண்டும்.நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும்போது, கேள்விகளுக்கு விரைவாகவும், மிகச் சரியாகவும் பதிலளிக்க வேண்டும். எண்ணம், செயல்பாடு அனைத்தும் நேர்மறையாக இருக்கவேண்டும்,'' என்றார். கல்லூரி அளவில், ஆறாவது செமஸ்டரில் முதலிடம் பிடித்த ஸ்ருதி, இரண்டாமிடம் பிடித்த ஷைலஜா, இரண்டாவது செமஸ்டரில் முதலிடம் பிடித்த சஹானா பிரியா, இரண்டாமிடம் பிடித்த அருண்குமார் ஆகியோருக்கு பரிசு வழங்கினார். மாணவர் மன்ற தலைவராக பிரதீப், செயலாளராக கார்த்திகேயன், பொரு ளாளராக சனோஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூரி டீன் சங்கர் நாராயணன், ஆலோசகர் சிவானந்தம், உள்ளிட் டோர் பங்கேற்றனர்.