ADDED : ஜூலை 28, 2011 10:05 PM
கோவை : கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவையில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைது
செய்யப்பட்டு, விடுதலையானவர் சேட் பக்ருதீன்; கோவை அருகே உள்ள
குறிச்சிப்பிரிவு என்.பி.,இட்டேரி பகுதியைச்சேர்ந்த இவர், கடந்த 22 ம் தேதி
உக்கடம் போலீசார் இவரை பிக்பாக்கெட் வழக்கில் கைது செய்து மத்திய சிறையில்
அடைத்தனர். இந்நிலையில், நேற்று சிறை மருத்துவமனை அருகே உள்ள மரத்தில்
தூக்கில் தொங்கினார். இதை பார்த்தவர்கள் ஓடி வந்து தூக்கில் தொங்கியவரை
கீழே இறக்கி, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால், சிகிச்சை பலனின்றி
இறந்தார். சிறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சில நாட்களாக மனமுடைந்த
நிலையில் சேட் பக்ரூதீன் இருந்ததாக தெரிகிறது. சிறை அதிகாரிகள் கொடுத்த
புகாரில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


