அனுமதியின்றி மணல் வாகனங்கள் பறிமுதல்
அனுமதியின்றி மணல் வாகனங்கள் பறிமுதல்
அனுமதியின்றி மணல் வாகனங்கள் பறிமுதல்
ADDED : செப் 04, 2011 01:58 AM
திட்டக்குடி:ராமநத்தம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய ஒரு ஜே.சி.பி.,
மற்றும் மூன்று டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ராமநத்தம் பகுதியில்
பொது ஏரிகளில் அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து
தாசில்தார் சையத் ஜாபர், மண்டல துணை தாசில்தார் பாலு, வருவாய் ஆய்வாளர்
வெங்கடேசன் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது பனையாந்தூர் மெயின்
ரோட்டில் மண் ஏற்றி வந்த மூன்று டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தபோது
அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது.மேலும் ஏரியில் மண் எடுக்க
பயன்படுத்திய மாமந்தூர் சிவப்பிரகாசத்திற்குச் சொந்தமான ஜே.சி.பி.,
மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மணி, துரை, அருந்ததி ஆகியோருக்குச் சொந்தமான
மூன்று டிராக்டர்களையும் பறிமுதல் செய்து ராமநத்தம் போலீஸ் ஸ்டேசனில்
ஒப்படைத்தனர்.