/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அடிப்படை வசதி என்ன விலை?: அல்லல்படும் அடுக்கம் ஊராட்சியினர்அடிப்படை வசதி என்ன விலை?: அல்லல்படும் அடுக்கம் ஊராட்சியினர்
அடிப்படை வசதி என்ன விலை?: அல்லல்படும் அடுக்கம் ஊராட்சியினர்
அடிப்படை வசதி என்ன விலை?: அல்லல்படும் அடுக்கம் ஊராட்சியினர்
அடிப்படை வசதி என்ன விலை?: அல்லல்படும் அடுக்கம் ஊராட்சியினர்
அடுக்கம் ஊராட்சியில் 4,000 பேர் வசிக்கின்றனர்.
இதுகுறித்து கிராமத்தினர் கூறுவது: ராசு, பாலமலை: ரோடு இருந்தும் அடுகத்திற்கு பஸ் இல்லை. பஸ்சை காரணம் காட்டி லாரிகளும் வர மறுக்கின்றன. விளைந்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. பள்ளி குழந்தைகள், கிராமத்தினர் அதிக கட்டணம் செலுத்தி வேன்களில் பயணிக்கின்றனர். மழை காலங்களில் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுவோம்.
முருகேசன், அடுக்கம்: கொடைக்கானல் மலைக்கு மூன்றாவது வழித்தடமாக பெருமாள்மலை- கும்பக்கரை ரோடு அமைக்கப்பட்டது. பணி முடிந்து பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இங்கு விளையும் காப்பி கொட்டைகளை அரசே கொள்முதல் செய்ய, மையம் அமைக்க வேண்டி மனு கொடுத்தும் பலனில்லை.
லட்சுமி, ஆதிவாசி: எங்கள் குடியிருப்பு பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. நிரந்தர வேலையும் இல்லை. ஓட்டு கேட்க வரும் போது, எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது போல் போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்து விட்டு செல்வர். அதன் பிறகு எந்த பிரச்னைகளும் தீர்க்கப்படவில்லை.
குடும்பத்துடன் தோட்ட வேலைக்கு சென்று வாழ்க்கையை கழிக்கிறோம். படிக்க வசதி இல்லாததால் குழந்தைகளையும் எங்களோடு அழைத்து செல்கிறோம்.
என்ன சொல்கிறார் ஊராட்சி தலைவர்?
செல்வராஜ்: ரூ. 10 லட்சத்தில் சீராடும் காணல் முதல் பெருமாள் மலை பிரிவு வரை குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ. நான்கு லட்சத்தில் சுடுகாடு மேற்கூரை, ரூ. ஒரு லட்சத்தில் சாமக்காடு காலனியில் தெரு விளக்கு, ஆதிவாசிகளுக்கு 65 தொகுப்பு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் வசதி கேட்டு, அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுக்கப்பட்டுள்ளது. பிரகாசபுரத்தில் சிமென்ட் சாலை, பழனி ரோடு சந்திப்பில அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முயற்சி எடுத்து, செய்து முடித்துள்ளேன்.