/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி : அரசு "கறார்' உத்தரவுகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி : அரசு "கறார்' உத்தரவு
கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி : அரசு "கறார்' உத்தரவு
கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி : அரசு "கறார்' உத்தரவு
கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி : அரசு "கறார்' உத்தரவு
கொடைக்கானல் : கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை, தகுதியான பயனாளிகளுக்கு வழங்க, அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை, புதிய அரசு பொறுப்பேற்றவுடன் 12 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதை நான்காயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கடந்த ஆட்சியில்பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், தகுதியான பயனாளிகள் உதவித்தொகையை பெறமுடியாத சூழல் இருந்தது. தற்போது, புது நிபந்தனைகளை விதித்து சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தில் சிபாரிசின் பேரில் பணம் வழங்கப்பட்டது. தற்போது, நிதியுதவி பெற கட்டாயம் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தை பிறந்திருக்க வேண்டும். குழந்தையின் தாய், தந்தைக்கு சொந்தவீடு இருசக்கர வாகனம் இருக்கக்கூடாது. வறுமைகோட்டுக்கு கீழ் இருக்க வேண்டும். ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் வீட்டிற்கும் நேரில் சென்று சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்தபிறகே, பணம் வழங்கவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.