/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அந்தியூரில் இரு ஆடுகள் பலி: சிறுத்தை புலியின் அட்டகாசமா?அந்தியூரில் இரு ஆடுகள் பலி: சிறுத்தை புலியின் அட்டகாசமா?
அந்தியூரில் இரு ஆடுகள் பலி: சிறுத்தை புலியின் அட்டகாசமா?
அந்தியூரில் இரு ஆடுகள் பலி: சிறுத்தை புலியின் அட்டகாசமா?
அந்தியூரில் இரு ஆடுகள் பலி: சிறுத்தை புலியின் அட்டகாசமா?
ADDED : ஆக 05, 2011 02:04 AM
அந்தியூர்: அந்தியூர் கூலி தொழிலாளி வளர்த்த இரண்டு ஆடுகள், கடித்து குதறப்பட்டு, மர்மமாக முறையில் இறந்து கிடந்தன.
காட்டுக்குள்ளிருந்து தப்பி வந்த சிறுத்தை புலியின் அட்டகாசமாக இருக்கலாம் என, வனத்துறையினர் சந்தேகமடைந்துள்ள நிலையில், அந்தியூர் டவுன் பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது.அந்தியூரிலிருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் உள்ள ஏ.எஸ்.எம்., காலனியை சேர்ந்தவர் உஸ்மான் அலி (37). இவர், இரண்டு வயதுடைய இரு ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டருகே தொழுவத்தில் கட்டியிருந்தார்.நேற்று அதிகாலை 3 மணிக்கு, அந்தியூர் மசூதியில் ரம்ஜான் தொழுகைக்கு செல்ல தயாரானார். வீட்டை விட்டு வெளியே வந்த அவர், தொழுவத்தின் அருகே ஒரு ஆடும், 50 அடி தூரத்தில் மற்றொரு ஆடும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்மமாக இறந்த இரு ஆடுகளும் வயிறு கிழிந்து, குடல் சரிந்த நிலையில், கடித்து குதறப்பட்டிருந்தன. அந்தியூர் வனத்துறை ரேஞ்சர் பழனிச்சாமி மற்றும் வன அதிகாரிகள், இரு ஆடுகளையும் பார்வையிட்டனர். அந்தியூர் கால்நடை டாக்டர் அர்ஜூன், ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார். ஆடுகளின் உடல் மீது நகங்களால் கீறப்பட்டது போல அடையாளமும், 100 அடி சுற்றளவில் விலங்குகளின் கால் தடமும் பதிவாகியிருந்தது. வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நாய், நரி கடித்ததற்கான அறிகுறியில்லை. கால் தடம், ஆட்டின் மீதுள்ள நகக்கீரலைப் பார்த்தால், சிறுத்தை புலியாக இருக்கலாம் என சந்தேகமாக இருக்கிறது' என்றனர். சிறுத்தைப் புலி ஊருக்குள் புகுந்து விட்டது என தகவல் கிளம்பியதால், அந்தியூர் பொதுமக்களிடையே கடும் பீதி நிலவுகிறது.