/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4வது பைப்லைன் திட்டம் தாமிரபரணி ஆற்றில் 3 இடங்கள் கலெக்டர் அதிரடி ஆய்வுதூத்துக்குடி மாநகராட்சிக்கு 4வது பைப்லைன் திட்டம் தாமிரபரணி ஆற்றில் 3 இடங்கள் கலெக்டர் அதிரடி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4வது பைப்லைன் திட்டம் தாமிரபரணி ஆற்றில் 3 இடங்கள் கலெக்டர் அதிரடி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4வது பைப்லைன் திட்டம் தாமிரபரணி ஆற்றில் 3 இடங்கள் கலெக்டர் அதிரடி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4வது பைப்லைன் திட்டம் தாமிரபரணி ஆற்றில் 3 இடங்கள் கலெக்டர் அதிரடி ஆய்வு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சிக்கு நான்காவது பைப்பு லைன் திட்டத்திற்கு குடிநீர் எங்கிருந்து கொண்டு செல்லலாம் என்பது குறித்து மூன்று இடங்களை நேற்று கலெக்டர் ஆஷீஷ்குமார் ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் இது குறித்து கூறியதாவது; தூத்துக்குடி நான்காவது பைப்லைன் திட்டத்திற்காக மருதூர் மேலக்கால் அணைக்கட்டு பகுதியிலும், கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்படுகையிலும், தாமிபரரணி ஆறு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதி ஆகிய மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று இடங்களில் எந்த இடம் தகுதியாக இருக்கும் என்று தேர்வு செய்து, யாருக்கும் பாதிப்பும் இல்லாத வகையில் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவக்கப்பட்டு நான்காவது பைப்லைன் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வன அலுவலர் நிகார் ரஞ்சன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கங்காதரன், உதவி பொறியாளர் ரகுநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனசிங்டேவிட், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா, பி.ஆர்.ஓ சுரேஷ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.