/உள்ளூர் செய்திகள்/கடலூர்/100க்கும் மேற்பட்ட திருமணங்கள் திணறியது திருவந்திபுரம் கோவில்100க்கும் மேற்பட்ட திருமணங்கள் திணறியது திருவந்திபுரம் கோவில்
100க்கும் மேற்பட்ட திருமணங்கள் திணறியது திருவந்திபுரம் கோவில்
100க்கும் மேற்பட்ட திருமணங்கள் திணறியது திருவந்திபுரம் கோவில்
100க்கும் மேற்பட்ட திருமணங்கள் திணறியது திருவந்திபுரம் கோவில்
ADDED : செப் 03, 2011 01:44 AM
கடலூர் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால், போக்குவரத்து பாதித்தது.நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றான, கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் செய்தால், குடும்பம் செழிக்கும் என்பது ஐதீகம்.
இங்கு, திருமணம் செய்பவர்களின் எண் ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.முகூர்த்த நாளான நேற்று, ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. இதனால், பண்ருட்டி செல்லும் வழியிலும், 1 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார், போக்குவரத்தைச் சீரமைத்தனர்.