Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கர்ப்பப்பை கட்டி அகற்றம்: அரசு டாக்டர்கள் சாதனை

கர்ப்பப்பை கட்டி அகற்றம்: அரசு டாக்டர்கள் சாதனை

கர்ப்பப்பை கட்டி அகற்றம்: அரசு டாக்டர்கள் சாதனை

கர்ப்பப்பை கட்டி அகற்றம்: அரசு டாக்டர்கள் சாதனை

ADDED : ஜூலை 28, 2011 09:28 PM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டியின் வயிற்றிலிருந்த கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

பொள்ளாச்சி அடுத்த வேட்டைகாரன்புதூரை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி அமராவதி(61). கூலி தொழிலாளி. இவர் கடந்த நான்காண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் வாந்தி மற்றும் கடும் வயிற்று வலி காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் வயிற்றில் கர்ப்பப்பை கட்டி இருப்பதையறிந்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற முடிவு செய்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் சிகிச்சை நடந்தது. மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர் சுமதி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் கலைசெல்வி, மயக்க மருந்து நிபுணர் மாரிமுத்து சேர்ந்த டாக்டர்கள் குழு இதில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: இம்மருத்தவமனைக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் வேட்டைகாரன்புதூரை சேர்ந்த பெண் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். கர்ப்பப்பை அருகில் சினைமுட்டைகள் உற்பத்தி ஆகும் பகுதியில் கட்டி இருந்தது. இந்த பகுதியில் கட்டியின் காரணமாக ரத்த ஓட்டம் குறைந்து இப்பகுதி உறுப்புகள் அழுக துவங்கியது.முதலில் ரத்த சோகை இருந்ததை அறிந்து நோயாளிக்கு ரத்தம் வழங்கப்பட்டது. பின் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டி அகற்றாமல் இருந்தால், புற்று நோயாக மாற வாய்ப்புகள் உள்ளது. ஆனால், தற்போது சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் இந்த நோயாளி நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.தற்போது தண்ணீர் ஆகாரம் வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை செய்த 24 மணி நேரத்துக்கு பின் உணவு வழங்கப்படும். பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட கட்டியில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய கோவை அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us