மாயாவதிக்கு வருமான வரி விலக்கு : எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
மாயாவதிக்கு வருமான வரி விலக்கு : எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
மாயாவதிக்கு வருமான வரி விலக்கு : எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

புதுடில்லி : உ.பி., முதல்வர் மாயாவதிக்கு, 2003-04ம் ஆண்டு கட்சித் தொண்டர்கள் அளித்த நன்கொடைக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு, அவரது கட்சித் தொண்டர்கள் 2003-2004ம் ஆண்டில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு ரொக்கமாகவும், 63 லட்சத்திற்கு அசையா சொத்துகளாகவும் பெருமளவில் நன்கொடை அளித்தனர். வருமான வரி கணக்கீட்டின்போது, மாயாவதிக்கு அளித்த நன்கொடைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது, 'வருமான வரி சட்டத்தின் கீழ் வருமான வரியில் வராது' என, தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில் டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த ஏ.கே.சிக்ரி மற்றும் சுரேஷ் கெய்த் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய உத்தரவை அங்கீகரித்து, வருமான வரித்துறையின் அப்பீலை டிஸ்மிஸ் செய்வதாக குறிப்பிட்டனர்.