/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வாகனங்களில் நம்பர் பிளேட் விவகாரம் அதிகாரிகள் அதிரடி ரெய்டுவாகனங்களில் நம்பர் பிளேட் விவகாரம் அதிகாரிகள் அதிரடி ரெய்டு
வாகனங்களில் நம்பர் பிளேட் விவகாரம் அதிகாரிகள் அதிரடி ரெய்டு
வாகனங்களில் நம்பர் பிளேட் விவகாரம் அதிகாரிகள் அதிரடி ரெய்டு
வாகனங்களில் நம்பர் பிளேட் விவகாரம் அதிகாரிகள் அதிரடி ரெய்டு
ADDED : செப் 14, 2011 12:03 AM
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய திடீர் அதிரடி சோதனையில் ஒரு கார் உட்பட 7 இருசக்கர வாகனங்களின் ஆர்.சி பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டு வாகனம் போக்குவரத்து அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்டது. தமிழக அரசு வாகனங்களில் புதிய முறையில் நம்பர் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியிலும் இது சம்பந்தமான சோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சந்திரசேகரன், பாத்திமாபர்வீன், டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார், போக்குவரத்துதுறையினர் வ.உ.சி கல்லூரி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அரசு விதிமுறைப்படி நம்பர் எழுதப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்தனர். இந்த சோதனையில் அரசின் உத்தரவுப்படி நம்பர் எழுதாமல் இஷ்டத்திற்கு நம்பர் பிளேட்டில் படம் வரைந்து நம்பர்கள் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கார் உட்பட 8 வாகனங்களில் நம்பர் புதிய முறைப்படி எழுதாதது சோதனையில் கண்டறியப்பட்டது. இதி ல் 6 வானகங்களில் உள்ள ஆர்.சி புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு இருசக்கர வாகனம் சிறைப்பிடிக்கப்பட்டு போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இது சம்பந்தமான சோதனை நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.