ADDED : ஆக 29, 2011 10:15 PM
கடலூர் :கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான நடத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைகேட்பு தின நாள் நடந்தது. கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து குடிநீர் வசதி, சாலை வசதி, முதயோர் உதவித்தொகை, பட்டா வழங்க கோருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 421 மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கலெக்டர் அமுதவல்லி ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பண்ருட்டி வட்டம், பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 63 பேர்களுக்கும் தலா 30 ஆயிரம் மதிப்பிலான வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருவேங்கடம், ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர் காமராசு உட்பட பலர் பங்கேற்றனர்.