/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கல்லூரி ஆசிரியருக்கு புத்துணர்வு பயிற்சிகல்லூரி ஆசிரியருக்கு புத்துணர்வு பயிற்சி
கல்லூரி ஆசிரியருக்கு புத்துணர்வு பயிற்சி
கல்லூரி ஆசிரியருக்கு புத்துணர்வு பயிற்சி
கல்லூரி ஆசிரியருக்கு புத்துணர்வு பயிற்சி
ADDED : ஜூலை 19, 2011 12:24 AM
தொட்டியம்: தொட்டியம், தோளுர்பட்டி, கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு புரிந்துணர்வு பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இரண்டு நாட்கள் நடந்த பயிற்சி முகாமினை கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். பயிற்சி முகாமிøன் டாக்டர்கள் சதாசிவம், டாக்டர் தேவனாதன் ஆகியோர் நடத்தினர். முகாமில் மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தோடு ஈடுபட்டு நல்ல மதிப்பெண்க் பெறுவது, வேலைவாய்ப்பு உள்ள மேற்படிப்பு மற்றும் வளாகத்தேர்விற்கு தயார் செய்வது குறித்தும், மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பயிற்றுவிப்பது பற்றிய பயிற்சியினை அளித்தனர். முகாமில், கொங்குநாடு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் லூயிஸ் டிசோசா, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குமரவேல், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.