Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் ரயில்வே மேம்பால தடுப்பு சுவர் கட்டும் பணி துவக்கம்

தென்காசியில் ரயில்வே மேம்பால தடுப்பு சுவர் கட்டும் பணி துவக்கம்

தென்காசியில் ரயில்வே மேம்பால தடுப்பு சுவர் கட்டும் பணி துவக்கம்

தென்காசியில் ரயில்வே மேம்பால தடுப்பு சுவர் கட்டும் பணி துவக்கம்

ADDED : செப் 17, 2011 02:50 AM


Google News

தென்காசி : தென்காசியில் ரயில்வே மேம்பால தடுப்பு சுவர் கட்டும் பணி துவங்கியது.தென்காசி ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2009ம் ஆண்டு டிச.15ம் தேதி துவங்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன் மேம்பால பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் மாவட்ட கலெக்டர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தினார். மேலும் வர்த்தக சங்கத்தினரும் இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.இதனையடுத்து தென்காசி ஆர்.டி.ஓ.காங்கேயன் கென்னடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிறுத்தப்பட்ட மேம்பால பணியை விரைவில் துவக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி ரயில்வே மேட்டு தெருவில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. மேலும் ரயில்வே கேட்டின் தென்பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணியும், மேம்பாலத்திற்கு தெற்கு பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணியும் துவங்கியது. மேம்பாலம் அமைந்துள்ள பகுதியின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்படுகிறது. சர்வீஸ் ரோட்டிற்கும் மேம்பாலத்திற்கும் இடையில் வாணம் தோண்டப்பட்டு அதில் கான்கிரீட் அமைத்து தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ரயில்வே கேட் வடபுறம் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன் பின்னர் ரயில்வே கேட் தென்புறம் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு மேல் மேம்பாலம் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் உறுதி கூறிய காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us