ADDED : ஆக 30, 2011 12:01 AM
பாபநாசம்: தஞ்சை வயலூர் சாரபள்ளத்தை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மகன் ராஜேஷ்கண்ணா (24).
விவசாய தொழிலாளி. இவர் கடந்த சனிக்கிழமை மதியம் அய்யம்பேட்டை தனது பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அய்யம்பேட்டை அண்ணாதுரை சிலை அருகே வரும்போது தஞ்சையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த சமீர் என்ற பஸ் ராஜேஷ்கண்ணா ஹோண்டா டூவீலர் மீது மோதியது இதில், படுகாயமடைந்த ராஜேஷ்கண்ணா சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஷ்கண்ணா சகோதரர் ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில், அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.