தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு
UPDATED : ஆக 20, 2011 09:51 AM
ADDED : ஆக 19, 2011 07:21 AM
சென்னை: 'தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை, தமிழகம் மற்றும் ராயலசீமா பகுதியில் தீவிரமடைந்து வருகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, விழுப்புரம், கரூர் உள்ளிட்ட பல இடங்களில், விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகபட்சமாக, போச்சம்பள்ளியில் 15 செ.மீ., மழை பதிவாகியது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த 24 மணி நேரத்தில், திருவிடைமருதூர், திருமயம், ஊத்தங்கரை, தோகைமலையில் 13, நாமக்கல், கரூரில் 12, ஆத்தூர், பரூர், புள்ளம்பாடியில் 10, மணல்மேல்குடி, ஆம்பூர், பென்னாகரம், வால்பாறை, ஈரோடு, பெருந்துறையில் 9, வலங்கைமான், சங்கரி துர்கா, வாழப்பாடியில் 8, புதுச்சேரி விமான நிலையம், ஆலங்குடி, பெருங்களூர், தர்மபுரி, வாணியம்பாடி, அரூர், கிருஷ்ணகிரி, மேட்டூர் அணை, நிலக்கோட்டை, மதுராந்தகத்தில் 7 செ.மீ., மழை பெய்தது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது, 'தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஒரு சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என்றார்.