ADDED : செப் 01, 2011 11:24 PM
அரூர்: அரூர் அருகே கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே வேலனூரை சேர்ந்தவர் ராமர் (24). இவர் நேற்று முன்தினம் பாலக்குட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு வேலனூருக்கு பைக்கில் வரட்டாறு பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் ராமரின் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். கோட்டப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.


