Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/சட்ட விழிப்புணர்வு இருந்தால் கடமையை செய்ய முடியும் : கரூர் கல்லூரி கூட்டத்தில் மாவட்ட நீதிபதி பேச்சு

சட்ட விழிப்புணர்வு இருந்தால் கடமையை செய்ய முடியும் : கரூர் கல்லூரி கூட்டத்தில் மாவட்ட நீதிபதி பேச்சு

சட்ட விழிப்புணர்வு இருந்தால் கடமையை செய்ய முடியும் : கரூர் கல்லூரி கூட்டத்தில் மாவட்ட நீதிபதி பேச்சு

சட்ட விழிப்புணர்வு இருந்தால் கடமையை செய்ய முடியும் : கரூர் கல்லூரி கூட்டத்தில் மாவட்ட நீதிபதி பேச்சு

ADDED : ஆக 27, 2011 11:54 PM


Google News

கரூர்: ''சட்டம் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் கடமையை செய்ய முடியும்,'' கரூர் மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி அரங்கில் நேற்று நடந்தது, கொங்கு அறக்கட்டளை தலைவர் நாச்சிமு த்து தலைமை வகித்தார். சிறப் பு அழைப்பாளர் மாவட்ட அம ர்வு நீதிபதி ராமமூர்த்தி கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: தற்போதுள்ள ஆட்சியாளர்களை விட 50 ஆண்டுக்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் தான் சிறந்தவர்கள் என கூறுவார்கள். நாற்பது ஆண்டுக்கு முன் அதிகாரிகளுக்கு இருந்த அதிகாரம் இப்போது இல்லை.அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,களுக்கு இந்த அதிகாரம் ஏன் குறைந்தது?. காரணம் என்ன என்றால் அடிப்படை சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போனதால் தான் இந்த நிலை. முந்தைய எம்.பி.,கள் சட்ட விழிப்புணர்வு பெற்றிருந்தார்கள். அம்பேத்கர் சட்ட சரத்துகளை உருவாக்க 40 நாட்கள் இரவும், பகலும் விவாதம் நடத்தினாராம். இதற்கென குழு அமைக்கப்பட்டு ஒரு சட்டத்திற்கு பின் உள்ள விளக்கத்தை மிக தெளிவாக கொடுத்துள்ளனர். ஆகவே தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டோம். ஒரு நாடு முன்னேற்றம் பெற்றுள்ளது என்றால் அந்த நாடு சட்டம் பற்றிய விழிப்புணர்வை தெளிவாக பெற்றுள்ளது என்று அர்த்தம். சட்டம், அரசியல் அமைப்பு சட்டம், சிவில் சட்டம், குற்றவியல் சட்டம் என்று உள்ளது. அரசியல் அமைப்பு சட்டம் என்பது, சமுதாயத்தில் எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் செய்ய முடியாது. ஒரு கல்லூரி தொடங்க வேண்டுமானால், அதற்கென சட்ட வழிகாட்டுதல் அரசிடம் உள்ளது. அதை வைத்து தான் நடத்த முடியும். சட்டத்தில் என்ன உள்ளதோ அதை தான் செய்ய முடியும். சிவில் சட்டம் என்றால் தனிமனித உரிமை, சொத்து உரிமை, தொழிலாளர் சட்டம் போன்றவற்றை சார்ந்ததாக உள்ளது. ஒரு இடத்தில் வேலை செய்தால் தொழிலாளர் சட்டம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். வேலை கிடைத்தால் போதும் என்று நீட்டிய இடத்தில் கையெழுத்து போடக்கூடாது. வங்கிக்கு கடன் வாங்க சென்றால் படிவத்தை பூர்த்தி செய்யாமலே கையெழுத்து போடுகிறோம். அதை பூர்த்தி செய்ய நமக்கு தெரிவதில்லை. சட்டம் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் கடமையை செய்ய முடியும், அடுத்தவர்களின் உரிமையையும் பாதுகாக்க முடியும். சினிமாவில், 'டிவி'யில், நீங்கள் பார்க்கிற சட்டம் வேறு. அ தில் துளியும் உண்மையில் லை. நீதிதேவதை கண்ணில் கட்டியிருக்கும் கருப்பு துணில கை யில் பிடித்திருக்கும் தராசு, மற்றொரு கையில் வைத்திருக்கும் கத்தி போன்றவை குறித்து யாருக்கும் தெரியாமல் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கல்லூரி மாணவர்களின் பல்வேறு சட்டம் பற்றிய கேள்விகளுக்கு நீதிபதி ராமமூர்த்தி விளக்கமளித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us