/உள்ளூர் செய்திகள்/மதுரை/பல்வேறு வழக்குகளில் 27பவுன் நகை மீட்புபல்வேறு வழக்குகளில் 27பவுன் நகை மீட்பு
பல்வேறு வழக்குகளில் 27பவுன் நகை மீட்பு
பல்வேறு வழக்குகளில் 27பவுன் நகை மீட்பு
பல்வேறு வழக்குகளில் 27பவுன் நகை மீட்பு
ADDED : ஜூலை 28, 2011 03:38 AM
திருமங்கலம் : திருமங்கலத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27
பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
திருமங்கலம் நகர், கண்டுகுளம், கே.டி.கே. நகர்
போன்ற பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்.எஸ்.ஐ., சிவனேசன்
தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விளாச்சேரி
மொட்டமலையைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முத்து (30) என்பவரிடம் விசாரித்த
போது அவர் தனது கூட்டாளிகளான மதுரைவீரன், செல்வராஜ், குருவன், கருப்பையா
ஆகியோருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. முத்துவை
கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 27 பவுன் நகைகளை மீட்டனர். மற்றவர்களை
தேடி வருகின்றனர்.