Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/தக்ஷின் சவுத் போல் 2011 மாணவிகளுக்கான பயிலரங்கம் : மகப்பேறு டாக்டர்கள் பங்கேற்பு

தக்ஷின் சவுத் போல் 2011 மாணவிகளுக்கான பயிலரங்கம் : மகப்பேறு டாக்டர்கள் பங்கேற்பு

தக்ஷின் சவுத் போல் 2011 மாணவிகளுக்கான பயிலரங்கம் : மகப்பேறு டாக்டர்கள் பங்கேற்பு

தக்ஷின் சவுத் போல் 2011 மாணவிகளுக்கான பயிலரங்கம் : மகப்பேறு டாக்டர்கள் பங்கேற்பு

ADDED : ஆக 05, 2011 02:38 AM


Google News

நாகர்கோவில் : தக்ஷின் சவுத் போல் 2011 அமைப்பு சார்பில் மகளிர் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான நான்கு நாள் பயிரலங்கம் நாகர்கோவிலில் நேற்று துவங்கியது.தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த டாக்டர்கள் சக்ஷின் சவுத் போல் 2011 என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இந்த அமைப்பு சார்பில் நான்கு நாள் மகளிர் நோய் கருத்தரங்கம் நாகர்கோவிலில் நடக்கிறது. இதன் துவக்க நிகழ்ச்சி ராமன்புதூர் சிறுமலர் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. விழவிற்கு டாக்டர் ஜெயம் கண்ணன் தலைமை வகித்தார். டாக்டர் சுமித்ரா ரகுவரன், டாக்டர் உமா செல்வன், டாக்டர் ஷகிலா பிரவின், பேராசிரியர் சொர்ணலதா உட்பட பலர் பேசினர். அதைத்தொடர்ந்து 7 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு வளர் இளம் பருவ பிரச்னைகள் குறித்த கல்வியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.



மாணவிகள் கேட்கும் கேள்விகளுக்கு அந்தந்த துறை நிபுணர்கள் பதிலளித்தனர். கேள்விகள் நேரடியாக கேட்க முடியாதவர்கள் தாளில் எழுதி அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும். இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் நிபுணர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து மாணவிகள், டாக்டர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. டாக்டர்கள் மாலதி பிரசாத், தேவகி, சந்திரகலா, பிரியா கண்ணன் உட்பட பலர் பயிற்சி அளித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.



அதைத்தொடர்ந்து எஸ் (ஒய்.இ.எஸ்) கிளப் துவங்கப்பட்டது. இந்த கிளப் நிர்வாகிகள் ஒவ்வொரு வகுப்பிலும் இருப்பர். சக மாணவிகளின் கேள்விகள், சந்தேகங்கள், பிரச்னைகளை இவர்கள் கேட்டறிந்து டாக்டர்களுக்கு தகவல் தெரிவிப்பர். டாக்டர்கள் வந்து உரிய விளக்கமளித்து உதவிகள் செய்வர். மாலையில் இந்து கல்லூரியில் எஸ் கிளப் துவக்க நிகழ்ச்சி நடந்தது. மேலும் கஸ்தூரிபா மாதர் சங்கத்தில் கற்பிணி பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ஜெயா கண்ணன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் நிகழ்ச்சியை நடத்தினர்.இரண்டாம் நாளான இன்று அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தியிலும், உடுப்பி ஹோட்டலிலும் மகப்பேறு மருத்துவத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. 6 மற்றும் 7ம் தேதிகளில் கன்னியாகுமரி சிங்கார் ஹோட்டலில் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கான பயிலரங்கம் நடக்கிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us