/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆடி தள்ளுபடியால் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம்ஆடி தள்ளுபடியால் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம்
ஆடி தள்ளுபடியால் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம்
ஆடி தள்ளுபடியால் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம்
ஆடி தள்ளுபடியால் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம்
ADDED : ஜூலை 28, 2011 03:07 AM
ஈரோடு: ஈரோட்டில் ஜவுளிக்கடைகள் போட்டி போட்டு, ஆடித்தள்ளுபடி அறிவிப்பை
வெளியிட்டுள்ளதால், துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ரோடு
ஆக்கிரமிப்பால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஈரோடு
பி.எஸ்.,பார்க், கனி மார்க்கெட், நேதாஜி மார்க்கெட், ஆர்.கே.வி. ரோடு,
பெரிய மார்க்கெட், மணிக்கூண்டு ஆகிய இடங்களில், நகரின் ஜவுளி மொத்த,
சில்லறை விற்பனைக் கடைகள், நகைக்கடைகள், ஜவுளி சந்தை, காய்கறி மற்றும்
மளிகை மொத்த, சில்லறை விற்பனை கடைகள், பழ மண்டிகள் அமைந்துள்ளன.
மாவட்டத்தின் ஒட்டு மொத்த தேவையையும் பூர்த்தி செய்யும் இடமாக இப்பகுதி
அமைந்துள்ளதால், நாள் தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து
செல்கின்றனர்.பொதுமக்கள் மட்டுமின்றி, வெளிமாநில, மாவட்ட வியாபாரிகளும்,
பொருட்கள் வாங்க வருவதால், அதிகப்படியான வாகனங்கள் வந்துசெல்கின்றன.
இப்பகுதியில் எப்போதுமே, அதிகப்படியான கூட்டமும், போக்குவரத்து நெரிசலும்
நிலவுகிறது.ஆடி மாதம் பிறந்துள்ளதால், நகரில் உள்ள சிறிய மற்றும் பிரதான
ஜவுளிக்கடைகள் 10 முதல் 50 சதவீதம் வரை ஆடித்தள்ளுபடியை போட்டி போட்டு
அறிவித்துள்ளன.வழக்கமாகவே கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
ஆடித்தள்ளுபடி அறிவிப்பால், எங்கு பார்த்தாலும், மக்கள் கூட்டம் நிரம்பிக்
காணப்படுகிறது.அதிகப்படியான மக்கள் வருகையால், ரோட்டை ஆக்கிரமித்து, புதிது
புதிதாக கடைகள் முளைத்துள்ளன. டூவீலர்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை,
அத்துமீறி 'நோ பார்க்கிங்' இடத்தில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்திச்
செல்கின்றனர்.பகல் நேரத்தில் கடைவீதிக்குள் கனரக வாகனங்கள் வர
அனுமதியில்லை. ஆனால், போலீஸாரை 'கவனித்து' விட்டு, தங்கள் வசதிப்படி
கடைவீதியில் நிறுத்தி, பொருட்களை ஏற்றி, இறக்குகின்றனர்.போக்குவரத்து
போலீஸார் ஒருபக்கம் ஆக்கிரமிப்பை அகற்றினாலும், மறு நாள் அதே இடத்தில்
ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்து விடுகின்றன.மாநகரில் ஆக்கிரமிப்பு கடைகளை
அகற்ற வேண்டிய வேலை மாநகராட்சியினர் பணி. ஆனால், மாநகராட்சியினர், இதுபற்றி
தெரிந்தும், வரியை மட்டும் வாங்கிக்கொண்டு தெரியாத மாதிரி இருந்து
வருகின்றனர் என்பது, போக்குவரத்து போலீஸாரின் குற்றச்சாட்டு.