சபரிமலை இன்று திறப்பு: ஐந்து நாட்கள் திறந்திருக்கும்
சபரிமலை இன்று திறப்பு: ஐந்து நாட்கள் திறந்திருக்கும்
சபரிமலை இன்று திறப்பு: ஐந்து நாட்கள் திறந்திருக்கும்
ADDED : ஜூலை 16, 2011 01:56 AM
சபரிமலை : ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை, இன்று மாலை திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு அடைக்கப்படும். கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் மாத மற்றும் சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை, இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரியை நடையைத் திறப்பார்.
இன்று மாலை வேறு பூஜைகள் ஏதும் இருக்காது. தொடர்ந்து நாளை அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் நடைபெறும். சிறப்பு மற்றும் வழிபாடு பூஜைகளான படி, உதயாஸ்தமனம் போன்ற பூஜைகளும் நடக்கும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு பத்து மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.தொடர்ந்து, நிறபுத்தரி உற்சவத்திற்காக ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு உற்சவம் துவங்கி, காலை 6.30 மணி வரை நடைபெறும். உற்சவம் முடிந்து அன்றிரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.