குடியுரிமை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 11, 2011 11:39 PM
தாகா : வங்கதேசத்தில், இந்தியாவுக்குச் சொந்தமான இடங்களில் வசிப்போர், தங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள், வங்கதேசக் குடியுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரி, நேற்று வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர்.
இந்தியா, வங்கதேசம் எல்லைகளுக்கு இடையில், இரு நாடுகளுக்கும் சொந்தமான துண்டு நிலங்கள் உள்ளன.
இவற்றில், இந்தியாவுக்குச் சொந்தமான, 111 துண்டு நிலங்கள் வங்கதேசத்திலும், வங்கதேசத்திற்குச் சொந்தமான, 51 துண்டு நிலங்கள் இந்தியாவிலும் உள்ளன.இப்பகுதிகளில் வாழும் மக்கள், இரு நாட்டின் குடியுரிமைகளையும் பெற இயலாத நிலையில், நாடற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.சமீபத்தில், வங்கதேசத்திற்கு பிரதமர் சென்ற போது, 111 துண்டு நிலங்களில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு, வங்கதேசக் குடியுரிமை அளிக்கும் வகையில், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு காலம் நிர்ணயம் செய்யப்படவில்லை.
குறிப்பிட்ட காலத்திற்குள், தங்களுக்கு வங்கதேசக் குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரி, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், நேற்று முன்தினம் மின் விளக்குகளை ஒளிர விடாமல், தங்கள் வீடுகளை இருளில் மூழ்கச் செய்தனர். அதோடு. பஞ்ச்கர் பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் பேரணி நடத்தினர்.