Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சொக்கநாதபுரம்-பாகனேரி வழியாக காளையார்கோயிலுக்கு பஸ் வசதி

சொக்கநாதபுரம்-பாகனேரி வழியாக காளையார்கோயிலுக்கு பஸ் வசதி

சொக்கநாதபுரம்-பாகனேரி வழியாக காளையார்கோயிலுக்கு பஸ் வசதி

சொக்கநாதபுரம்-பாகனேரி வழியாக காளையார்கோயிலுக்கு பஸ் வசதி

ADDED : ஜூலை 15, 2011 10:05 PM


Google News

பாகனேரி : சொக்கநாதபுரத்திலிருந்து பாகனேரி வழியாக காளையார்கோவிலுக்கு பஸ் விட கோரிக்கை எழுந்துள்ளது.

காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாகனேரி, சொக்கநாதபுரம்,தென்மாவலி, காடனேரி, கொட்டகுடி,அம்மன்பட்டி உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்தவர்கள் தங்களின் தேவைகளுக்காக தினமும் காளையார்கோவில் செல்ல மூன்று பஸ்கள் மாறி செல்லும் நிலை காணப்படுகிறது.

ஊராட்சி ஊழியர்கள்,சத்துணவு ஊழியர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமானால் ஒரு நாள் விடுமுறையில் செல்ல வேண்டியுள்ளது.கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவிகளும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். விவசாயிகள், வேளாண் மை விரிவாக்க மையத்திற்கு செல்லவும் முடியவில்லை. சொக்கநாதபுரத்திலிருந்து பாகனேரி, கண்டுப்பட்டி, நாட்டரசன்கோட்டை வழியாக காளையார்கோவிலுக்கு பஸ் வசதி ஏற்படுத்தனால் ஒன்றிய அலுவலகத்திற்கு அனைத்து மக்களும் எளிதில் செல்ல வசதியாக இருக்கும். மேலும் கண்டுப்பட்டி, நாட்டரசன்கோட்டை போன்ற பகுதிகளுக்கும் செல்ல முடியும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us