/உள்ளூர் செய்திகள்/சென்னை/தாம்பரம் - முடிச்சூர் சாலையில் ஓடிய பாலாறுதாம்பரம் - முடிச்சூர் சாலையில் ஓடிய பாலாறு
தாம்பரம் - முடிச்சூர் சாலையில் ஓடிய பாலாறு
தாம்பரம் - முடிச்சூர் சாலையில் ஓடிய பாலாறு
தாம்பரம் - முடிச்சூர் சாலையில் ஓடிய பாலாறு
ADDED : ஆக 26, 2011 01:29 AM
தாம்பரம் : தாம்பரம் - முடிச்சூர் சாலையில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் கேபிள் பதிக்க, பள்ளம் தோண்டிய போது, குழாய் உடைந்ததால், பல லட்சம் லிட்டர் பாலாறு குடிநீர், வீணாக சாலையில் ஆறாக ஓடியது.
பழைய சீவரம் பாலாற்றில் இருந்து தாம்பரம், பல்லாவரம், சிட்லபாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு பாலாறு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக வண்டலூர் வாலாஜாபாத் சாலை, தாம்பரம் முடிச்சூர் சாலை வழியாக குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உள்ளாட்சிக்கும் தனித்தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டு, குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. இதில், தாம்பரம் முடிச்சூர் சாலையில் மட்டும் கடந்த சில தினங்களில், மூன்று இடங்களில், குடிநீர் குழாய்கள் உடைப்பெடுத்தன. அவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக சரிசெய்தனர். இந்நிலையில், தாம்பரம் முடிச்சூர் சாலையில் மேம்பாலம் இறங்கும் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில், கேபிள் பதிக்க, பள்ளம் தோண்டிய போது, தாம்பரம் பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பெடுத்தது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி, முடிச்சூர் சாலையில் குளம் போல தேங்கியது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். உடைப்பெடுத்த பகுதியை சரியாக கண்டறிய முடியவில்லை. ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் பள்ளம் தோண்டினால், போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், உடனடியாக பழுதை சரிசெய்ய முடியவில்லை. முடிச்சூர் சாலையில் நீர் தேங்கியிருப்பதால், சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்நிலையில், குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக தாம்பரம், பல்லாவரத்திற்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'உள்ளாட்சிக்கும், குடிநீர் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்காமல், தனியார் நிறுவனங்கள் பள்ளம் தோண்டி, குழாயை உடைத்துவிடுகின்றன. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிறுவனங்கள் மீது, அபராதம் விதிப்பதுடன் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.