ADDED : ஜூலை 23, 2011 11:55 PM
விழுப்புரம் : நன்னாட்டாம்பாளையத்தில் பட்டா கொடுத்தவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் அடுத்த நன்னாட்டாம்பாளையம் காலனியைச் சேர்ந்த அலமேலு, ராஜேஸ்வரி, மேனகா உட்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நன்னாட்டாம்பாளையத்தை சேர்ந்த 52 குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடந்த 2005ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அனைவருக்கும் வீட்டு மனைகள் அளந்து வழங்க வேண்டுமென கூறியுள்ளனர்.