Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/எலச்சிபாளையம் யூனியனில் இலவச கறவை மாடு வழங்கப்படும்: கலெக்டர்

எலச்சிபாளையம் யூனியனில் இலவச கறவை மாடு வழங்கப்படும்: கலெக்டர்

எலச்சிபாளையம் யூனியனில் இலவச கறவை மாடு வழங்கப்படும்: கலெக்டர்

எலச்சிபாளையம் யூனியனில் இலவச கறவை மாடு வழங்கப்படும்: கலெக்டர்

ADDED : செப் 16, 2011 01:28 AM


Google News

நாமக்கல்: ''எலச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட புள்ளாக்கவுண்டம்பட்டி, மண்டகபாளையம் கிராமங்களில், இலவச கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் பேசினார்.

நாமக்கல் தாலுகா, ஏளூர் மேல்நிலைப்பள்ளியில், சிறப்பு மனுநீதி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்துப் பேசியதாவது: எலச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட புள்ளாக்கவுண்டம்பட்டி, மண்டகாபாளயைம் ஆகிய இரு கிராமங்களில், 100 பயனாளிகள் தேர்வு செய்து, அவர்களுக்கு அதிக பால் கறக்கும் மாடுகள், அவர்களது விருப்பத்தின்படி, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. கறவை மாட்டுக்கு, அரசின் சார்பில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ராசிபுரம் யூனியனுக்கு உட்பட்ட அரசபாளையம், எலந்தக்குட்டை ஆகிய பஞ்சாயத்துகளில், 53 நபர்கள் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மூன்று பெட்டை ஆடு, ஒரு ஆண் ஆடு என மொத்தம் நான்கு ஆடுகள், அவர்களது விருப்பத்தின்படி, உள்ளூர் சந்தையில் வாங்கப்பட்டுள்ளது.



ஆடுகளுக்கான கொட்டகை அமைக்க, 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆடுகள் காப்பீடு செய்யப்படுகிறது. வருவாய்துறை அமைச்சர், துணை சபாநாயகர் ஆகியோரால், இலவச மாடு, ஆடுகள், இலவச கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. சிறப்பு மனுநீதி திட்டத்துக்கு முன்பாக, 284 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில், 124 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 29 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 131 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.



முன்னதாக, 97 நபர்களுக்கு விவசாய கூலித் தொழிலாளர் ஓய்வூதிய தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. 24 நபர்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவு, ஒன்பது நபர்களுக்கு முழு மானியத்துடன் மக்காச்சோள மின் கிட்டுகள், ஒரு நபருக்கு முழு மானியத்துடன் கூடிய மின்கிட், ஐந்து நபர்களுக்கு, 50 சதவீத மானிய விலையில் தக்காளி புடல், கொத்தவரை, மிளகாய் விதை வழங்கப்பட்டது. ஆர்.டி.ஓ., வினய், வேளாண் துறை இணை இயக்குனர் பிரபாகரன், மண்டல இணை இயக்குனர் பாரதி, தாட்கோ மாவட்ட மேலாளர் கோபால், மாவட்ட ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், தாசில்தார் புஷ்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us