ஐந்து கூட்டுறவு நூற்பாலைகள் 67 கோடி ரூபாய் செலவில் நவீனமயம்
ஐந்து கூட்டுறவு நூற்பாலைகள் 67 கோடி ரூபாய் செலவில் நவீனமயம்
ஐந்து கூட்டுறவு நூற்பாலைகள் 67 கோடி ரூபாய் செலவில் நவீனமயம்
ADDED : செப் 14, 2011 01:13 AM
சென்னை:தமிழகத்தில், ஐந்து கூட்டுறவு நூற்பாலைகள் 67 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட உள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆகிய இடங்களில் கூட்டுறவு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன.மாநில அரசின், இலவச வேட்டி, சேலை திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கான இலவச சீருடை திட்டம், பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் பொது சந்தை துணி வகை உற்பத்திக்கு தேவைப்படும் பல்வேறு நூல் ரகங்கள், இந்த ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இவ்வாலைகளை நவீனப்படுத்த, தென்னிந்திய துணி நூல் ஆராய்ச்சி கழகம் மூலம், 67.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரித்துள்ள திட்ட அறிக்கை பரிசீலனை செய்யப்பட்டு, ஆலைகள் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று, தமிழக அரசின் 2011 - 2012ம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணி நூல் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.