Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/உள்ளாட்சி தேர்தல் பணி துவங்கியது மாவட்ட தேர்தல் அலுவலர் நியமனம்

உள்ளாட்சி தேர்தல் பணி துவங்கியது மாவட்ட தேர்தல் அலுவலர் நியமனம்

உள்ளாட்சி தேர்தல் பணி துவங்கியது மாவட்ட தேர்தல் அலுவலர் நியமனம்

உள்ளாட்சி தேர்தல் பணி துவங்கியது மாவட்ட தேர்தல் அலுவலர் நியமனம்

ADDED : ஆக 11, 2011 01:07 AM


Google News

தேவகோட்டை : தமிழகத்தில் அக்டோபருடன் தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் முடிகிறது.

அதற்குள் தேர்தல் நடத்தி புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஜெ.தலைமையில் புதிய அரசு பதவியேற்றவுடன் புதியதாக மாநில தேர்தல் அதிகாரியை நியமித்தது. சட்டசபையில் உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மீண்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. நேற்று முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலராக மாவட்ட கலெக்டர் ராஜராமனை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 90 நாட்களுக்கு இப்பொறுப்பு வகிப்பார். நவ.11 ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி மாநில கெஜட்டில் வெளியிடவேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்ட அறிவிப்பு நகராட்சி, ஒன்றியங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நகராட்சி, ஒன்றிய அளவிலான தேர்தல் அலுவலர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். அலுவலர் அறிவிப்பின் மூலம் தேர்தல் பணி துவங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us