/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் 444 நாட்கள் டிபாஸிட் திட்டம் துவக்கம்மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் 444 நாட்கள் டிபாஸிட் திட்டம் துவக்கம்
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் 444 நாட்கள் டிபாஸிட் திட்டம் துவக்கம்
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் 444 நாட்கள் டிபாஸிட் திட்டம் துவக்கம்
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் 444 நாட்கள் டிபாஸிட் திட்டம் துவக்கம்
ADDED : ஆக 05, 2011 01:59 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தில் 444 நாட்கள் டிபாஸிட் திட்டம் நேற்று முதல் துவங்கியது.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் உள்பட ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 29 கிளைகள் உள்ளன. வங்கியில் மார்ச் 31ம் தேதிப்படி 774.20 கோடி ரூபாய் டிபாஸிட் பெறப்பட்டது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11 சதவீதம் வளர்ச்சி. நடப்பாண்டு ஜூலை 31ம் தேதி வரை 812 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜூலை 28 வரை 806.53 கோடி ரூபாய் டிபாஸிட் பெறப்பட்டது. ஜூலை மாத நிலவரப்படி 99 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்கியில் டிபாஸிட்டுக்கான வட்டி விகிதங்களை உயத்தி வழங்கும் வகையில், ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து, செப்டம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும் புதிய டிபாஸிட் திட்டத்தை வங்கி நேற்று முதல் துவங்கியது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் டிபாஸிட்டுகள் 444 நாட்கள் கால அளவு கொண்டது. இதற்கு ஆண்டுக்கு 10.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 11 சதவீதமும் வட்டி வழங்கப்படும். வங்கியின் இணைப்பதிவாளர் லோகநாதன் கூறுகையில், ''வங்கியின் டிபாஸிட் இலக்கை விரைவில் அடையும் வகையில் புதிய டிபாஸிட் திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துவோம். அந்த வகையில் அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் 444 நாள் டிபாஸிட் திட்டத்தை இன்று (நேற்று) துவங்கியுள்ளோம். இதை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.