ADDED : செப் 28, 2011 12:15 PM
திருநெல்வேலி: காலமுறை ஊதியம் மற்றும் முறைகேடான மாற்றத்தைக் கண்டித்து வரும் 30ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்போவதாக டாஸ்மாக் சங்கம் அறிவித்துள்ளது.
நெல்லையில் நிருபர்களிடம் பேசிய டாஸ்மாக் சி.ஐ.டி.யூ., சங்க தலைவர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரியும், முறைகேடான இடமாறுதலைக் கண்டித்தும் வரும் 30ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.